News - கங்கோத்ரி பனிமலையில் ஒன்றரை கிலோ மீட்டர்
கங்கை நதிக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் கங்கோத்ரி பனிமலைப் பகுதியில் சுமார் 1.5 கி.மீ. அளவுக்கு பனி அளவு குறைந்திருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த 30 ஆண்டுகளில் இந்த அளவு பனிப்பரப்பு குறைந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 15 முதல் 20 மீட்டர்கள் வரை கங்கோத்ரியில் பனி அளவு குறைந்துள்ளது. ஆனால் கங்கோத்ரியில் சமீபமாக பனி வற்றுவது சற்றே குறைந்திருப்பதாக வந்துள்ள தகவல் சற்றே ஆறுதல் அளிப்பதாயுள்ளது.
இருப்பினும் இந்த பனிமலையின் எதிர்காலம் கவலைக்கிடமாகியுள்ளது. ஏனெனில் மலையின் சில உச்சி இடங்களில் சில வகை செடி கொடிகளும், மரங்களுமே வளரத் துவங்கியுள்ளதாக செயற்கைக்கோள் படம் தெரிவிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
For more info : vsudhir27@hotmail.com
Report Abuse